சத்தீஸ்கரில் போதை ஒழிப்பு இயக்கத்தின் கூட்டத்தில் காங்கிரஸ் அமைச்சர் டாக்டர் பிரேம்சாய் சிங் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியவை தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், "ஆல்கஹாலைப் பற்றியும் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் மக்கள் பேசுகிறார்கள், ஆனால் அதில் உள்ள பல நன்மைகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. மேலும், மதுவைப் பற்றி பேசும்போது, அதைக் குடிப்பதற்கான சரியான வழிமுறைகளை நினைவில் கொள்ள வேண்டும். முதலில் மதுவின் சுவை நீர்த்து போகும் அளவு சரியான விகிதத்தில் நீர் நிரப்பப்பட வேண்டும். அது தான் மது அருந்துவதற்கான வழிமுறை.
அதே போல, எல்லோரும் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறார்கள். சரியான சாலை இல்லை என மக்களிடமிருந்து எங்களுக்கு அழைப்புகள் வருகிறது. ஆனால், அந்த சாலைகளில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில், மிகச் சிறந்த சாலைகள் உள்ள இடங்களில், சாலை விபத்துகள் நடக்கின்றன. ஏனென்றால்... நல்ல சாலையில் மக்கள் முழு வேகத்தில் வாகனத்தை ஓட்டுகிறார்கள். அதனால் விபத்துக்கள் நடக்கின்றன" எனப் பேசியிருக்கிறார்.
அமைச்சரின் இந்த பேச்சு பலதரப்பு மக்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
from Latest News https://ift.tt/i26vFNZ
0 Comments