கோவை: பகையாளியை கொல்ல ஆன்லைனில் வெடி பொருள் வாங்கிய ஆசாமி கைது - சிக்கியது எப்படி?!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் நடந்த கார் வெடிப்பு சம்பவம் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து ஏராளமான வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர் தன் சகோதரர் மூலம் ஆன்லைனில் வெடிமருந்துக்கு தேவையான வேதிப் பொருள்களை வாங்கியது தெரியவந்தது.

கோவை கார் வெடிப்பு

அந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே கோவையில் மற்றொரு நபர் ஆன்லைன் மூலம் வெடிபொருள்களை வாங்கியது தெரியவந்துள்ளது.

கார் வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு, ஆன்லைன் மூலம் வெடிப் பொருள்களை வாங்குபவர்கள் குறித்து போலீஸ் கண்காணித்து வந்தனர். அப்போதுதான் கோவை குரும்பப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் ஆன்லைன் கணக்கில் இருந்து சல்பர், பொட்டாசியம் போன்றவை வாங்கப்பட்டது தெரியவந்தது.

மாரியப்பன்

செந்தில் மொத்த பழ வியாபாரம் செய்து வந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் அவரிடம், ஓர் தள்ளுவண்டியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

செந்திலின் கணக்கை பயன்படுத்தி, மாரியப்பன் பொட்டாசியம் 100 கிராம் மற்றும் சல்பர் 50 கிராம் வாங்கியது தெரியவந்தது. அவர் மீது வெடி பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் அவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

கைது

கோவில்பட்டியில் உள்ள தனது பகையாளியை கொலை செய்வதற்காக அவர் வெடி பொருள்களை வாங்கியதாக போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/qaZlsQw

Post a Comment

0 Comments