FIFA World Cup 2022 Round Up:`அந்த மனசு தான் சார்...!' ரசிகர்களுக்கு பாராட்டு டு கொண்டாட்டம் வரை

1. நேற்று, 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணியும் ஜப்பான் அணியும் மோதின. இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஜெர்மனி வீரர்கள் அனைவரும் வாயை மூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். FIFA அமைப்பு, 'one love' என்ற வாசகம் பொறித்த ஆர்ம் பேண்டை அணிந்து விளையாட தடை விதித்துள்ளது. இந்தத் தடை, எங்கள் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்ற கருத்தைப் பதிவு செய்வதற்காக இவ்வாறு செய்துள்ளனர். 

2. ஜெர்மனி மற்றும் ஜப்பான் அணிகள் இடையான இப்போட்டியின் முடிவில், 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது. ஜப்பான் அணி,நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணியை வீழ்த்தி கால்பந்து ரசிகர்களை வியப்படையச் செய்தது. ஆட்டம் முடிந்த பிறகு ஜப்பான் அணியின் ரசிகர்கள் சிலர், மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றினர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

3. ஜப்பானிய ரசிகர்கள் மைதானத்தில் உள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளையும் அகற்றும் வீடியோவை, உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் FIFA அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளது. 

4. மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா அணி வீழ்த்தியது. அர்ஜென்டினா அணி, உலகக் கோப்பையின் 92 வருட வரலாற்றில்  சவுதி அரேபியாவிடம் முதன்முறையாக தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றி, கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, சமூக வலைதளங்களில் விமர்சனமும் விவாதங்களும் எழுந்த வண்ணமே உள்ளன.

சவுதி அரேபியா vs அர்ஜென்டினா

உண்மையில், அர்ஜென்டினா அணி முதல் பாதியில் இரண்டு, மூன்று கோல்களை அடித்திருக்க முடியும் என்றும், ஆனால், அணியின் சில வீரர்கள் போதுமான உடற்தகுதியில் இல்லை, என தெரிவிக்கின்றனர். கிறிஸ்டியன் ரொமேரோ, லின்ட்ரோ பேரிடிஸ், ஏஞ்சல் டி மரியா ஆகிய வீரர்கள் காயம் காரணமாக சரியாக விளையாடவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

5. ஜெர்மனி அணியை  ஜப்பான் அணி வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொண்டாடும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது. தெருக்கள், வணிக வளாகங்கள் (mall) மற்றும் சாலைகளில் ஜப்பான் கால்பந்து ரசிகர்கள் கொண்டாடும் வீடியோக்கள் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகின்றன. 



from Latest News https://ift.tt/PY30uTL

Post a Comment

0 Comments