சேலம், அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியை பகுதியை சேர்ந்த அருள்மொழி குமார் என்பவருடைய மகன் நிர்மல் குமார் முதுநிலை பிசியோதெரபி படித்து வந்தார். தினமும் சொந்த ஊருக்கு சென்று வர முடியாத நிலை என்பதால் கல்லூரிக்கு எதிரே உள்ள தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிர்மல் குமார் தினமும் பெற்றோரிடம் செல்போனில் பேசுவது வழக்கம். ஆனால் நேற்று காலையில் இருந்து நிர்மல் குமாருக்கு செல்போனில் அவரின் பெற்றோர் தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. இதுகுறித்து நிர்மல் குமார் நண்பர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர்களுக்கும் ஒன்றும் தெரியாததால், உடனே நிர்மல் குமார் தங்கி இருக்கும் இடத்திற்குச் சென்று பார்க்க சொல்லி உள்ளனர்.
அதன் மூலம் நிர்மல் குமார் தங்கி இருந்து அறைக்கு நண்பர்கள் சென்று பார்த்தபோது, அங்கு அறை கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை திறக்குமாறு வெகு நேரமாக நண்பர்கள் கதவை தட்டினர். ஆனால் நிர்மல் குமார் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு நிர்மல் குமார் தூக்கிட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து நிர்மல் குமார் பெற்றோர்களிடம் தகவல் அளித்ததுடன் ஆட்டையாம்பட்டி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், நிர்மல் குமார் மரணத்தில் தற்கொலைக்கான காரணம் வேறு ஏதும் உள்ளதா? அல்லது ராகிங் போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்று விசாரணை செய்து வருகின்றனர்.
from Latest News https://ift.tt/v873OgL
0 Comments