திருப்பதி வி.ஐ.பி தரிசனத்தில் மாற்றம் - பயன்பெறப்போகும் 15,000 பக்தர்கள்! எப்படித் தெரியுமா?

திருமலை திருப்பதி வேங்கடப் பெருமாள் திருக்கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதை உறுதி செய்யும்பொருட்டு திருமலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தை தேவஸ்தானம் சோதனை முறையில் மாற்றியுள்ளது.

திருமலை திருப்பதி

இதன்படி வி.ஐ.பி. பிரேக் தர்ஷன் இதுவரை காலை 5 மணி முதல் 8 மணி வரை நடைமுறையில் இருந்து வந்தது. இதனால் இரவு ஶ்ரீவாரி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மறுநாள் காலை 8 மணிவரை காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. அதிலும் வார இறுதி நாள்களில் வருபவர்கள் கூடுதலாக ஒரு நாள் தங்கியிருந்து தரிசனம் செய்யும் நிலைமை உண்டானது. எனவே வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தை மாற்றுவது என்று தேவஸ்தானம் முடிவு செய்தது.

எனவே ஶ்ரீவாரி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் விரைந்து தரிசனம் முடிக்க வசதியாக தேவஸ்தானம், வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தைத் தற்போது காலை எட்டு மணிக்கு மாற்றியுள்ளது. இதற்கான சோதனை முயற்சி டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. அது மிகவும் பலன் அளிப்பதாக இருந்த நிலையில் அதுவே இனி தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் 15,000 பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய இயலும் என்று தெரிய வருகிறது.

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதியில் டிசம்பர் மாத முக்கிய தினங்கள்

டிசம்பர் 4 - கீதா ஜெயந்தி

டிசம்பர் 5 - சக்கரத்தீர்த்த முக்கோடி உற்சவம்

டிசம்பர் 7 - கார்த்திகை தீபத்திருவிழா

டிசம்பர் 8 - திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்

டிசம்பர் 16 - மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் தொடக்கம்

டிசம்பர் 19 - சர்வ ஏகாதசி,

டிசம்பர் 22 - ஆத்யாயன உற்சவம் தொடக்கம்

தொண்டரடிப் பொடியாழ்வார் திருநட்சத்திரம்



from Latest News https://ift.tt/YiJmaNI

Post a Comment

0 Comments