கோவளத்தில் வெளிநாட்டு பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: `கைதான இருவரும் குற்றவாளிகள்’ - நீதிமன்றம்

லாட்வியா (latvia) நாட்டைச் சேர்ந்த 40 வயதுள்ள பெண் மன அழுத்த நோய்க்காக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த போத்தன்கோட்டில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். ஆயுர்வேத மையத்தில் தங்கி சிகிச்சை எடுத்துவந்த அந்த பெண் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி வாக்கிங் சென்ற சமயத்தில் காணாமல் போனார். இதுகுறித்து அவரின் சகோதரி இலீஸ், போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் அந்த பெண்ணின் கணவர் ஆண்ட்ரூஸ் கேரளா டி.ஜி.பி.யை சந்தித்து புகார் அளித்தார். ஆரம்பத்தில் போலீஸ் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து லாட்வியா பெண்ணின் சகோதரி மீடியாக்களை சந்தித்தார். அதன் பின்னர் போலீஸ் விசாரணை வேகம்பெற்றது. இதையடுத்து 38 நாள்களுக்கு பிறகு வாழமுட்டம் மாங்குரோவ் காட்டுக்குள் லாட்வியா பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை மூலம் அது லாட்வியா நாட்டுப் பெண்ணின் உடல் என உறுதிசெய்யப்பட்டது.

குற்றவாழியாக அறிவிக்கப்பட்ட உமேஷ்

போலீஸார் விசாரணை நடத்தியதில் நடைபயிற்சிக்காக சென்ற அந்த பெண்ணிடம் சுற்றுலா வழிகாட்டி என அறிமுகமான உமேஷ், உதயகுமார் ஆகியோர் ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர், அவருக்கு போதைபொருள் கொடுத்து புதர் காட்டுக்குள் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை அவர் வெளியில் சொல்லிவிடுவார் என நினைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. உமேஷ், உதயகுமார் ஆகியோர் சுற்றுலா வழிகாட்டிகள் என்ற போர்வையில் போலியாக சுற்றிவந்து பல குற்றங்கள் செய்துள்ளது தெரியவந்தது.

குற்றவாழியாக அறிவிக்கப்பட்ட உதயகுமார்

கொலையை கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில் அறிவியல்பூர்வமான பல ஆதாரங்களை போலீஸார் திரட்டினர். இந்த வழக்கு அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு திருவனந்தபுரம் பிரின்ஸ்பல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்துவந்தது. சுமார் நான்கரை ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் உமேஷ் மற்றும் உதயகுமார் ஆகியோர் குற்றவாளிகள் என கோர்ட் அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது. தனது சகோதரிக்கு நீதி கிடைத்துள்ளதாக இலீஸ் தெரிவித்துள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Fv7jK4L

Post a Comment

0 Comments