கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில், நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் பா.ஜ.க-வின் முக்கிய பிரிவான 'சக்தி கேந்திரா'வுக்கு துணைத் தலைவர் பதவிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவர் அருள் தலைமையில் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக நடைபெற்ற வாக்குவாதத்தில், பா.ஜ.க கிழக்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட பொதுச் செயலாளர் ரவியின் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது.
அதில் இரு தரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து தாக்கிக் கொண்டனர். அதேபோல அங்கு இருந்த நாற்காலிகளை எடுத்தும் சரமாரியாக தாக்கி கொண்டனர். அதையடுத்து உருட்டு கட்டைகள் மற்றும் இரும்பு ராடுகளாலும் தாக்கிக் கொண்டனர். அதில் இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தகவல் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் போலீஸார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயத்துடன் இருந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் இந்தச் சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்காததால் இதுவரை வழக்கு பதிவு எதுவும் செய்யப்படவில்லை.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Sk6orWj
0 Comments