திருநெல்வேலியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழக ஆளுநர் ரவி குதர்க்கமான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். ’தமிழ்நாடு’ என்றாலும், ’தமிழகம்’ என்றாலும் ஒன்றுதான். ’தமிழ்நாடு’ தவறான சொல் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார். ’ஆந்திர பிரதேஷ்’, ’மத்திய பிரதேஷ்’ என்றாலும் ’நாடு’ என்றுதான் பொருள்.
உத்தரப்பிரதேஷ், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று ’பிரதேஷ், ’ராஷ்டிரா’ என்று இருக்கிறது எனச் சொல்வாரா? வட மொழியில் ராஷ்டிரம், பிரதேஷ், ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த உணர்வு இருக்கிறது. வேண்டுமென்றே பெரியார், அண்ணா முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டும், அதற்கு எதிரான கருத்து தோற்றத்தை உருவாக்க வேண்டுமென விரும்புகிறார் ஆளுநர் ரவி. அவர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரதிநிதி.
ஆகவே, அவரது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் பணிகளை மேற்கொள்ளலாம். ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார். இது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும். தமிழ்நாடு, தமிழகம் இரண்டும் ஒரே பொருள்தான். சட்டபூர்வமாக, காமராஜர் காலத்திலேயே, தீர்மானம் நிறைவேற்றபட்டு, அண்ணா காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலோடு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
ஆகவே ஆளுநரின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தி.மு.க அரசின் கொள்கைக்கும், திராவிட அரசியல் கோட்பாட்டுக்கும் எதிரானவர் ஆளுநர். நாளை தமிழக சட்டப்பேரவை கூடவிருக்கிறது. ஆளுநர் உரை எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் எனத் தெரியவில்லை. தமிழ்நாடு அரசின் கொள்கையை முன்னிறுத்தக்கூடிய உரையை ஆற்ற எந்த வகையிலும் ஆளுநர் தகுதி படைத்தவர் அல்ல” என்றார்.
from Latest News https://ift.tt/LlIuXAo
0 Comments