சிவகாசி: கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்களிடம் 27 சவரன் நகை திருட்டு - கைவரிசை காட்டிய திருடர்கள்

சிவகாசியில் பிரசித்திப்பெற்ற பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்தவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி, அசாதம்பாவிதங்கள்‌ ஏற்படாத வண்ணம் தடுக்கும்வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

பக்தர்களின் ஒருபகுதி

இந்நிலையில் பக்தர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்மநபர்கள் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த சிவகாசியை சேர்ந்த 6 பெண்களிடம் மொத்தம் 27 சவரன் தங்க நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட மஃப்டி போலீஸார் பாதுகாப்புப்பணியில் இருந்தும் திருடர்கள் தங்களின் கைவரிசையை காட்டிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பாபிஷேகம்

இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸார் கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் முக்கிய சந்திப்புகள், வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான‌ காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.



from Latest News https://ift.tt/AO7MSyD

Post a Comment

0 Comments