கர்நாடக தேர்தல்: ``பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்" - பாஜக மேலிடம் அறிவிப்பு!

பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான வேலைகளில் பா.ஜ.க-வும், காங்கிரஸும் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் இந்தமுறை கர்நாடக தேர்தலில் களமிறங்குகிறது.

பாஜக

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடக தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் கூறிவர, பா.ஜ.க தனித்து போட்டியிட்டு வெல்லும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விட்டிருக்கிறார்.

இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க இணை பொறுப்பாளராக, தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அண்ணாமலை

இது குறித்து பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பா.ஜ.க மாநில பொறுப்பாளராகவும், தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை இணை பொறுப்பாளராகவும் நியமித்திருக்கிறார். இந்த நியமனம் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



from Tamilnadu News https://ift.tt/bfo78Q0

Post a Comment

0 Comments