பனசபதம: 1000 மடஙக பலனகள அளளததரம நள; நரடல மதல தனம வர - கடபபடபபத எபபட?

பானு என்றால் சூரியன். சப்தமி என்றால் ஏழாம் நாள். சூரிய பகவானுக்கு உகந்த திதி சப்தமி திதி. சூரிய பகவானுக்கு உரிய நாள் ஞாயிற்றுக்கிழமை. இந்த இரண்டும் இணைந்துவரும் தினம் பானுசப்தமி. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது பலமடங்கு பலன்களைக் கொடுக்கும். சூரியனின் அருளைப் பெற்றுத்தரும். இதனால் தேக ஆரோக்கியம், காரியவெற்றி, சுபகாரியங்களின் சேர்க்கை ஆகியன கிடைக்கும் என்பது நம்பிக்கை. சாதாரண பானுசப்தமி நாளில் வழிபடும்போதே இப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்போது ஆயிரம் சூரிய கிரகண நாளில் வழிபட்ட பலன்களைத் தரும் அபூர்வ பானு சப்தமி தினத்தில் வழிபட்டால் எப்படிப்பட்ட அற்புத பலன்கள் கிடைக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டாமா?

நாளை (25.6.23) ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் இணைந்துவருகிறது. இந்த நாள் ஆஷாட மாதம் என்னும் சந்திர மாதத்திலும் தமிழ் மாதமான ஆனியிலும் நிகழ்கிறது. இவ்வாறு ஆனி, ஆடி மாதங்களில் வரும் பானு சப்தமி திதி அற்புத பலன்களைக் கொடுக்கக் கூடியது. ஆயிரம் சூரிய கிரகண நாள்களில் வழிபாடு செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுப்பது என்கின்றன ஞான நூல்கள்.
சூரிய பகவான்

ஒருவர் தன் வாழ்வில் ஆயிரம் அமாவாசைகளையும் ஆயிரம் பௌர்ணமிகளையும் கூடக் காணலாம். ஆனால் ஆயிரம் சூரிய கிரகண காலங்களில் பூஜை செய்வது என்பது சாத்தியமற்றது. மனித வாழ்வில் பெற சாத்தியமற்ற அபூர்வ பலன்களை இந்த நாள் நமக்கு அள்ளித் தர இருக்கிறது. இதை சகடபுர ஸ்ரீ வித்யா பீட ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இந்த நாளில் புனித நீராடி சூரியனை வழிபட்டால் கபிலாஷஷ்டி யோகம் என்னும் 120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்க்கும் அபூர்வ புண்ணிய காலத்துக்கு இணையான பலன்கிடைக்கும். இந்தப் புண்ணியகாலத்தில் நாம் முறையாக வழிபாடு செய்தால் நம் முற்பிறவிக் கர்மாக்கள் குறைந்து நற்பலன் ஏற்படும் என்கிறார்கள் சாஸ்திர விற்பன்னர்கள்.

அபூர்வ பானுசப்தமி கடைப்பிடிப்பது எப்படி?

இப்படிப்பட்ட அபூர்வமாக வாய்க்கும் புண்ணியகாலத்தில் எப்படி வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து நம் ஞானநூல்கள் விரிவாகச் சொல்கின்றன. காலையில் எழுந்ததும் புனித நீராட வேண்டும். சமுத்திரம் அல்லது ஆற்றங்கரையில் நீராடுவது விசேஷம். அவ்வாறு நீராட வாய்ப்பில்லாதவர்கள் தம் வீட்டில் குளிக்கும் நீரில் ஓம் என்று கைகளால் எழுதி கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

'கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி

நர்மதா சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்'

என்று சொல்லி அந்த நீரில் சகல புண்ணிய தீர்த்தங்களும் இறங்கியருள வேண்டும் என்று மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். ரத சப்தமிக்கு ஏழு எருக்கம் இலைகளை எடுத்துக்கொண்டு அதில் அட்சதை வைத்துக் கிழக்கு நோக்கி நின்று நீராடுவது வழக்கம். பானுசப்தமி நாளிலும் அதேபோன்று நீராடுவது விசேஷம்.

நீராடல்

நீராடி முடிந்தபின்பு திருநீறோ அல்லது திருமண்ணோ அவரவர்கள் வழக்கப்படி தரித்துக் கொண்டு கண்கண்ட தெய்வமாக விளங்கும் சூரிய பகவானை தரிசிக்க வேண்டும். சூரியனுக்கு இன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது சிறப்பு. பிறகு அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். நவகிரக சந்நிதியில் இருக்கும் சூரிய பகவானுக்கு சூரிய காந்தி அல்லது செம்பருத்தி மலர்களை சமர்ப்பித்து வழிபடுங்கள்.

தலைமுறைகளைக் காக்கும் தானம் எவை?

இந்த வழிபாட்டில் முக்கியமானது தானம். கிரகண வேளையில் தானம் செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும். அதேபோன்று இந்த நாள் முழுவதும் நாம் செய்யும் தானம் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும். சூரிய பகவானுக்கு உரிய தானம் கோதுமை. எனவே கோதுமையாகவோ அல்லது கோதுமையால் செய்த உணவுகளாகவோ தயாரித்துக் குறைந்தபட்சம் ஏழுபேருக்கு தானம் தர வேண்டும். சிவப்பு நிற ஆடைகளை வாங்கி ஏழை எளியவர்களுக்கு அளிக்கலாம். இவ்வாறு செய்தால் நம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கிக் காரிய வெற்றி கிடைக்கும். செல்வச் செழிப்பு உண்டாகும். நம் தலைமுறைகள் குறைவின்றி வாழும் என்கிறார்கள் பெரியோர்கள்.

கோதுமை
நாளை இரவு 10 மணிவரை சப்தமி திதி உள்ளது. மேலும் காலை 8 மணிக்கு மேல் உத்திர நட்சத்திரம் தொடங்கிவிடுகிறது. உத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம். எனவே இந்த நாளில் தவறாமல் சூரிய வழிபாடு செய்து சகல நன்மைகளையும் பெறுங்கள்.


from Latest news https://ift.tt/WDt0gH4

Post a Comment

0 Comments