களகடடம பர ஜகநநதர கயல ரதயதர; 600 ஆணட பரமபரயததன சறபபகள எனனனன?

பூரி, ஒடிசா மாநிலத்தில் அமைந்திருக்கும் புண்ணிய நகரம். ‘புருஷோத்தம க்ஷேத்திரம் பூரி ஜகந்நாதம்’ என்று புராணங்களால் போற்றப்படும் அற்புதத் தலம். பல்வேறு புராண நிகழ்வுகள் இங்கு நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தத் தலத்தின் சிறப்புகள் அநேகம். பகவான் கிருஷ்ணர் இங்கு விரும்பி வந்து கோயில்கொண்டார் என்கிறார்கள்.

இந்திரத்துய்மன் என்கிற மன்னன் பூவுலகில் பகவான் விஷ்ணுவுக்கு மாபெரும் ஆலயம் ஒன்றை அமைக்க விரும்பியபோது, பகவான் கிருஷ்ணரே சிற்பியாக வந்து இங்குள்ள ஆலயத்தையும் கருவறை தெய்வங்களையும் வடித்தார் என்கிறார்கள்.

பூரி ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரை 2023

12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஜகந்நாதர் ஆலயத்தில் பாலபத்திரர் (பலராமர்), ஜகந்நாதர் (மகாவிஷ்ணு), சுபத்ரா (ஶ்ரீகிருஷ்ணரின் தங்கை) ஆகியோர் மூலவர்களாக அருள்பாலிக்கின்றனர். இவர்களோடு பகவானின் சுதர்சன சக்கரமும் இங்கு வழிபடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆஷாடமாதத்தின் வளர்பிறையின் இரண்டாம் நாள் இந்த ரத யாத்திரை தொடங்கும். இதற்கென ஒவ்வோர் ஆண்டும் புதிய தேர்கள் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மூன்று மூலவர்களுக்கும் மூன்று தேர்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சுவாமி ஜகந்நாதர் எழுந்தருளும் தேரான 'நந்தி கோஷம்' 45 அடி உயரத்திலும் பாலபத்திரர் எழுந்தருளும் தேரான 'தலத்வாஜா' 44 அடி உயரத்திலும் சுபத்ரா எழுந்தருளும் தேரான 'தேபாதலனா' 43 அடி உயரத்திலும் செய்யப்பட்டுள்ளன.

வண்ணமயமாகக் காட்சி அளிக்கும் இந்தத் தேர்களுக்குப் பூஜைகள் செய்யப்பட்டபின் ரதயாத்திரை தொடங்கும். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவினைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே குவிவார்கள்.

பூரி ஜகந்நாதர் ஆலயத்துக்கு சிறிது தூரத்தில் உள்ள மௌசிமா கோயில் மற்றும் குண்டிச்சா கோயில் வரை இந்த யாத்திரை செல்லும். குண்டிச்சா கோயிலில் சுவாமி ஜகந்நாதர் தங்கியிருக்கும்போது தேவி மகாலட்சுமி சுவாமியை வந்து தரிசிப்பதாகவும் பிறகு சுவாமியோடு சேர்ந்து கோயிலுக்கு எழுந்தருள்வதாகவும் ஐதிகம்.

பூரி ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரை 2023

கடந்த 600 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் புகழ்பெற்ற யாத்திரை நேற்று தொடங்கப்பட்டது. ஒடிசா மாநில கவர்னர் கணேஷ் லால் மற்றும் முதல்வர் நவீன் பட்நாயக் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். வாத்தியங்கள் சத்தம் விண்ணைப் பிளக்க பக்தர்கள் சுவாமி ஜகந்நாதரையும் பலராமரையும் சுபத்ரா தேவியை வாழ்த்தி கோஷமிட ரத யாத்திரை தொடங்கியது.

தற்போது ஒடிசாவில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது என்றபோதும் பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ரதயாத்திரையில் கலந்துகொண்டனர்.

உலகின் மிகப்பெரிய ஜகந்நாதர் கோயில் சமையலறை

இங்கு வழங்கப்படும் பிரசாதம் விசேஷமாகக் கருதப்படுகிறது. பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் சமையலறை உலகிலேயே மிகப்பெரியது என்கிறார்கள்.

ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றும் இந்த சமையலறையில் விசேஷ தினங்களில் லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கிறார்கள். சாதாரண நாள்களில் 20,000 பேருக்குக் குறையாமல் சமைக்கிறார்கள்.

சமையலறையில் சமைக்கப்பட்டு, சாமிக்குப் படைக்கப்பட்டு, `ஆனந்த் பஸார்’ என்ற இடத்தில் பிரசாதங்கள் விநியோகிக்கப்படும். அப்போது அந்த உணவுகளின் வாசனை மிகவும் அற்புதமாக இருக்கும்.

பூரி ஜகந்நாதர் கோயில் ரதயாத்திரை 2023

இங்கு சமைக்கப்படும் உணவுகளை மகாலட்சுமியே நேரடியாகக் கண்காணிப்பதாக ஐதிகம். இதனால் இங்கே சமைக்கப்படும் உணவுகள் மிஞ்சுவதும் இல்லை பற்றாக்குறை ஏற்படுவதும் இல்லை என்கிறார்கள்.

கூட்ட நெரிசல்

நேற்று கூட்ட நெரிசல் காரணமாக தேரோட்டத்தின் போது சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். பலராமன் தேருக்கு முன்பாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.



from Latest news https://ift.tt/Jr64yFn

Post a Comment

0 Comments