கர்நாடக மாநிலம், பெங்களூரின் கேம்பிரிட்ஜ் லே-அவுட் பகுதியில் 3டி தொழில்நுட்பத்தில் தபால் நிலையம் கட்டப்பட்டிருக்கிறது. இதுதான் 3டி தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம். 1,100 சதுர அடி பரப்பளவில் இந்த தபால் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தபால் நிலையத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "இது பெருமைமிகு தருணம். 3டி தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்திருக்கிறது" எனக் கூறினார்.
இந்த 3டி தபால் நிலையம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``பெங்களூரில் கட்டப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையத்தைப் பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். இது இந்தியாவின் புதுமைக்கும் முன்னேற்றத்துக்கும் ஓர் எடுத்துக்காட்டு. இது ஒரு தன்னம்பிக்கைமிக்க இந்தியாவின் உணர்வையும் உள்ளடக்கியது. இந்தக் கட்டுமானத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from Latest news https://ift.tt/7aUp263
0 Comments