துப்பாக்கிச்சூட்டில் 3 குக்கிப் பழங்குடியின இளைஞர்கள் பலி... மணிப்பூரில் தொடரும் வன்முறை!

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கிடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூரச் செயல் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த சில நாள்களாக மணிப்பூரில் அமைதி திரும்பிவருவதாகக் கூறப்பட்டது. ஆனால், இன்னும் கலவரங்கள் அங்கு ஓய்ந்தபாடில்லை.

மணிப்பூர் வன்முறை

நாகா பழங்குடியினரான தாங்குல்ஸ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய உக்ருல் மாவட்டத்திலுள்ள குக்கி தோவாய் கிராமத்தில், நேற்று அதிகாலை கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்கிறது. இதில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக உக்ருல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், ``லிட்டன் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்திலிருந்து அதிகாலை கடுமையான துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. எனவே, சுற்றியிருக்கும் கிராமத்தின் வனப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, துப்பாக்கிச்சூட்டில் 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. அந்த இளைஞர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கை, கால்களில் வெட்டுக்காயங்கள் இருக்கின்றன" என்றார்.

மணிப்பூர் முதல்வருடன் அமித் ஷா

இதற்கு முன்னதாக, இந்த மாதம் 5-ம் தேதி விஷ்ணுபூர், சுராசந்த்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் இரு சமூகங்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று மைதேயி, இரண்டு குக்கி சமூகத்தினர் கொல்லப்பட்டனர். மணிப்பூரின் மக்கள்தொகையில் 53 சதவிகிதம் பேர் மைதேயி இனத்தையும், 40 சதவிகித பேர் மலைகளில் வசிக்கும் நாகா மற்றும் குக்கி பழங்குயினங்களையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from Latest news https://ift.tt/PYb3rFU

Post a Comment

0 Comments