'மதுரை அதிமுக மாநாட்டின் பட்ஜெட் ரூ.250 கோடி; ஆளுக்கு 1,000 ரூபாய்!' - திருச்சியில் டி.டி.வி.தினகரன்

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அ.ம.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்காக திருச்சிக்கு வந்திருந்த அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "நானும் நண்பர் ஓ.பி.எஸ்-ஸூம் சேர்ந்து வருங்காலங்களில் அரசியலில் பயணிப்போம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடனான கூட்டணியில் அ.தி.மு.க., இருக்கும் பட்சத்தில், அந்தக் கூட்டணியில் அ.ம.மு.க., இருக்குமா... இருக்காதா என்பதை தேர்தல் நேரத்தில் முடிவுசெய்வோம். 2019 காலகட்டத்தில் நம்முடைய அண்ணன் மாவீரன் பழனிசாமி ஆட்சியில் அவர்களுடைய தவறான ஆட்சிமுறையால் மக்கள் கொதிப்படைந்து, எதிர்ப்புணர்வைக் காட்டுவதற்காகத்தான் தி.மு.க., கூட்டணிக்கு வாக்களித்தார்கள். 2021 தேர்தலிலும் அதுதான் நடந்தது. ஆனால், இந்த இரண்டரை ஆண்டுகளில் பழனிசாமியையும் தாண்டி அவருக்கு அண்ணனைப்போல ஸ்டாலினுடைய ஆட்சி இருக்கிறது.

டி.டி.வி.தினகரன்

தமிழ்நாட்டு மக்களுடைய கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள். அதனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் ஆகியவை தி.மு.க-வை எதிர்த்து மக்கள் வாக்களிக்கின்ற தேர்தல்களாக இருக்கும். உறுதியாக தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க-வுக்கும் பழனிசாமிக்கும் மாற்றாக அ.ம.மு.க-வை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணிக்கிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், "தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை விலக்கிவிடுவோம் என்று சொன்னார்கள். மக்களை ஏமாற்றும்விதமாக தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதி அது. தி.மு.க-வுடைய குணாதிசயமே மக்களை ஏமாற்றுவதுதான். மதுரை அ.தி.மு.க., மாநாட்டுக்காக, கடந்த ஆட்சியில் ஈட்டிய செல்வத்தையெல்லாம் கொண்டு மக்களை அள்ளிச் செல்லலாம் என நினைக்கிறார்கள். எப்படியும் 250 கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தை வாரியிறைப்பார்கள். ஓர் ஆளுக்கு 1,000 ரூபாயும், இன்ன பிறவற்றையும் கொடுத்து மாநாட்டுக்கு மக்களைக்கூட்ட இருக்கிறார்கள். தொண்டர்கள் தானாகக் கூடாத வரை, அந்த மாநாடு வெற்றியைத் தராது.

எடப்பாடி பழனிசாமி அம்மாவுடைய கட்சியை கபளீகரம் செய்திருக்கிறார். அதை ஜனநாயக முறைப்படி மீட்டெடுப்பதற்காக அம்மாவின் உண்மையான தொண்டர்களால் உருவாக்கப்பட்டதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். தொடர்ந்து நாங்கள் நம்பிக்கையுடன் போராடி உறுதியாக வருங்காலத்தில் ஜனநாயக ரீதியாக மீட்டெடுப்போம். 2026 தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்துவதற்காக அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைவார்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from Latest news https://ift.tt/rJ1sPme

Post a Comment

0 Comments