"கவர்ச்சியான வேடங்களில் நடிப்பேன் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால்..."- ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் 2018-ல் 'தடக்' படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா குறித்து சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். 

ஜான்வி கபூர்

“தடக் படத்திற்கு பிறகு நான் வழக்கம்போல கவர்ச்சியான வேடங்களில் நடிப்பேன் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. தற்போது நடிப்பதற்குச் சவாலான கதாபாத்திரங்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். என்னால் இயன்ற அளவு நன்றாக நடித்து வருகிறேன். நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

பிறகு தென்னிந்திய சினிமாவில் கால்பதித்தது குறித்து பேசிய அவர், என் அம்மாவிற்கு முதலில் தென்னிந்திய சினிமாவில்தான் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் மிகுந்த அன்பைப் பெற்றார். அங்கு நடிப்பது எனக்கு கிடைத்த சரியான வாய்ப்பு என்று நினைக்கிறேன்.

ஜான்வி கபூர்

தென்னிந்திய சினிமாவும் இந்தித் திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.  தென்னிந்திய சினிமாவில் இருந்து நாங்கள் நிறைய உத்வேகத்தைப்  பெற்றுள்ளோம். மேலும் மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.     



from Latest news https://ift.tt/xiBUCb0

Post a Comment

0 Comments