`திருமணம் செய்து கொள்ளும் யோசனையை மகளிடம் சொன்னேன்' -மகளின் ரியாக்ஷ்ன் குறித்துப் பேசிய சுஷ்மிதா!

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தைத் தன்வசமாக்கிய சுஷ்மிதா சென், பாலிவுட் படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்துள்ள `Taali’ வெப் சீரிஸில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

Taali

திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழும் சுஷ்மிதா, தனது 24 வயதில் 2000-ல் ரெனீயை (Renee) தத்தெடுத்தார். அதன்பின்னர் 2010-ல் தனது சிறிய குடும்பத்தில் அலிஷாவையும் (Alissah) சேர்த்துக் கொண்டார். தனது 47 வயதில் சிங்கிள் மதராக இரண்டு மகள்களையும் வளர்த்து வருகிறார். 

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சுஷ்மிதாவிடம், `குழந்தைகள் அப்பாவை மிஸ் செய்கிறார்களா' எனக் கேள்வி எழுப்பப்பட்டது. `இல்லவே இல்லை. உங்களிடம் இருக்கும் ஒன்றை மட்டுமே உங்களால் இழக்க முடியும். உங்களிடம் ஒருபோதும் அது இல்லாதிருந்தால், அதை எப்படி இழப்பீர்கள்’ என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்,  `இப்போது நான் திருமணம் செய்து கொள்ளட்டுமா' என்ற யோசனையை அவர்களிடம் சொல்லும்போது, அவர்கள் `ஏன், எதற்காக, எனக்கு அப்பா வேண்டாம்' என்றார்கள். 

சுஷ்மிதா சென் - ரெனீ - அலிஷா!

`அவர்கள், தந்தை இல்லை என்பதைக் குறித்து கவலை கொள்வதில்லை, அவர்களுக்கு என்னுடைய தந்தை, தாத்தா இருக்கிறார். அவர்களுக்கு எல்லாமே அவர்தான். அவர்களுக்குத் தேவைப்படும் எந்தவொரு நேரத்திலும் தந்தையாகவும், சிறந்த முன்மாதிரியாகவும் இருந்தார்' என்று நெகிழ்ச்சியடைந்துள்ளார்.



from Latest news https://ift.tt/TVphMKY

Post a Comment

0 Comments