மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதின் (18). இவரின் சகோதரியை விக்ரம் சிங் என்பவர் 2019-ம் ஆண்டு பாலியல் சித்ரவதை செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் செய்திருந்தார். இந்த வழக்கை திரும்பப் பெறும்படி சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் அவரது குடும்பத்தினரிடமும் விக்ரம் சிங் நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால் வழக்கை வாபஸ் பெற முடியாது என்று தெரிவித்துவிட்டார் அந்தப் பெண். விக்ரம் சிங் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், விக்ரம் சிங், கோமல் சிங், ஆசாத் சிங் ஆகியோர் நிதின் வீட்டிற்குச் சென்று வீட்டிலிருந்த நிதின் சகோதரி மற்றும் அவரது தாயாரிடம் பேசி வழக்கை வாபஸ் பெறும்படி கேட்டுக்கொண்டனர்.
ஆனால் வழக்கை வாபஸ் பெற முடியாது என்று அவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் அவர்கள் வீட்டை அடித்து நாசமாக்கிவிட்டு நேராக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நிதினிடம் சென்றனர். அவரிடமும் இதே கோரிக்கையை முன்வைத்தனர். அவரும் வாபஸ் பெற முடியாது என்று சொன்னதால், அவரை அவர்கள் அடித்து உதைத்தனர். சம்பவ இடத்திற்கு நிதின் தாயாரும், அவரது சகோதரியும் வந்தனர்.
நிதினை அடிக்க விடாமல் அவரது தாயார் தடுக்க வந்தார். உடனே நிதின் தாயாரை நிர்வாணமாக்கி அடித்தனர். அவர்கள் அடித்ததில் படுகாயமடைந்த நிதின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இதையடுத்து இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து, முக்கிய குற்றவாளி விக்ரம் சிங் உட்பட 8 பேரைக் கைதுசெய்துள்ளனர்.
கிராம பஞ்சாயத்து தலைவரின் கணவர் உட்பட சிலர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்துப் பேசிய நிதின் சகோதரி, ``எனது சகோதரரை விட்டுவிடும்படி கையெடுத்து கும்பிட்டேன். ஆனால் அவர்கள் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக மிரட்டினர். இதனால் அங்கிருந்து தப்பித்து காட்டுக்குள் ஓடிவிட்டேன். அங்கிருந்து போலீஸாருக்கு போன் செய்தேன்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/21e0Qfd
0 Comments