ஹரியானா மாநிலம், பானிபட் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் மூன்று பெண் கூலித் தொழிலாளர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த புதன் கிழமை மாலையில், கூரிய ஆயுதங்களுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்த நான்குபேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்தவர்களை மிரட்டி, கயிறால் அனைவரின் கைகளையும் கட்டியிருக்கிறார்கள். இதற்கிடையில், வீட்டில் இருந்த மூன்று பெண்களையும் குடும்பத்தார் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். மேலும், அவர்களிடமிருந்த பணம், நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறை மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள், சம்பவ இடத்துக்கு வந்து தடயவியல் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, ``நான்கு பேர்கொண்ட கும்பல் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறோம். இதே போன்ற சம்பவம் இந்தக் கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் நடந்திருக்கிறது.
தம்பதி இருந்த அந்த வீட்டில் நுழைந்த ஒரு கும்பல், கணவன் மனைவி இருவரையும் கடுமையாகத் தாக்கி, அவர்களின் செல்போன், நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது. இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே குழுவாக இருக்கும் எனச் சந்தேகிக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். பானிபட்டில் ஒரே கிராமத்தில் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள், கொடூரமான முறையில் அரங்கேறியது அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/JesTlhW
0 Comments