தூத்துக்குடி: கொலை வழக்கில் கைதான ஏட்டு... டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்ட மாவட்ட எஸ்.பி!

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தவர் பொன் மாரியப்பன். இவர், 2021-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவி ஆய்வாளரிடம் பிணி அறிக்கை சமர்ப்பித்துவிட்டு பிணிக் கடவுச்சீட்டு பெற்று காவல் நிலையத்திலிருந்து சென்றார். ஆனால், அதே நாள் இரவில் தூத்துக்குடி, முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த லூர்து ஜெயசீலனைக் கொலை செய்திருக்கிறார்.

பொன் மாரியப்பன், மோகன்ராஜ்

உயிரிழந்த லூர்து ஜெயசீலன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி லூர்து ஜெயசீலன், அழகு என்பவரைக் கொலை செய்திருக்கிறார். இது சம்பந்தமாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கொலைசெய்யப்பட்ட அழகு என்பவர் மத்திய பாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பொன் மாரியப்பனின் தாய் மாமா ஆவார்.

தன்னுடைய தாய்மாமா அழகுவைக் கொலைசெய்த லூர்து ஜெயசீலனை 23 ஆண்டுகள் கழித்து பழிக்குப் பழியாகக் கொலைசெய்ய வேண்டுமென்று திட்டமிட்டு தலைமைக் காவலர் பொன் மாரியப்பன், மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து லூர்து ஜெயசீலனைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர்.  தொடர்ந்து பொன் மாரியப்பன் மீது துறைரீதியான விசாரணை நடந்து வந்தது. இதில், இவர் மீதான குற்றம் நிரூபணம் ஆனது.

பாலாஜி சரவணன் - மாவட்ட எஸ்.பி

இதையடுத்து  ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக்கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல் புரிந்திருக்கும்  பொன்மாரியப்பனை பணியிலிருந்து பணி நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். கொலை வழக்கில் கைதான தலைமைக் காவலர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Latest news https://ift.tt/o3iR01B

Post a Comment

0 Comments