பிக் பாஸ் தமிழ் சீசன் 7 விஜய் டிவியில் வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்க இன்னும் பத்து நாள்களே இருப்பதாலும் வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் இரண்டு வீடுகள் என்பதாலும் சென்னை பூந்தமல்லி பகுதியிலிருக்கும் பிக் பாஸ் வீடு விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது.
இன்னொருபுறம் நிகழ்ச்சிக்குள் செல்லும் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
சமூக ஊடகங்களில் ‘பிக் பாஸ் செல்கிறார்கள்’ எனப் பலரது பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் நாமும் ’குக்கு வித் கோமாளி’ ரவீனா உள்ளிட்ட சிலரது பெயர்களை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.
அந்த வரிசையில் தற்போது, பல முறை முயற்சி செய்து நடக்காமல் போக, இந்த முறை பிக் பாஸ் வாய்ப்பைப் பெற்றிருக்கும் இன்னொரு சின்னத்திரைப் பிரபலம் குறித்தத் தகவலும் நமக்குக் கிடைத்துள்ளது.
அவர், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் ‘அமுல் பேபி’ என உடன் நடித்த ஆயிஷாவால் செல்லமாக அழைக்கப்பட்டாரே விஷ்ணு, அவரேதான். தற்போது ‘வேற மாறி ஆபிஸ்’ வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார் இவர்.
பிக் பாஸ் தொடங்கியது முதலே அதில் கலந்து கொள்ள முயற்சி செய்த பலரில் இவரும் ஒருவர். அதிலும் கடந்த சீசனில் இவர் ரசிகர்களாலும் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டதாகத் தகவல்கள் கிசுகிசுத்தன. ஏனெனில் கடந்த சீசனில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்ட ஆயிஷாவும் இவரும் சில காலம் காதலர்களாக இருந்தனர். ஆனாலும் கடந்த சீசனில் இவர் கடைசி வரை நிகழ்ச்சிக்கு வரவே இல்லை.
சரி, இந்த சீசனில் எப்படி வாய்ப்பைத் தட்டித் தூக்கினாராம்? விசாரணையில் இறங்கினோம்.
‘’கூட்டிக் கழிச்சுப் பாரு, கணக்குச் சரியா வரும்’ என ’அண்ணாமலை’ படத்தில் ராதாரவி பேசுகிற ஒரு டயலாக் வருமே, அதைச் சுட்டிக்காட்டிப் பீடிகைப் போட்டனர் சிலர்.
‘’கடந்த சீசன்ல ரச்சிதா கலந்துக்கறதுக்கு முன்னாடி, அவங்க கூட ஒரு சீரியல்ல ஜோடியா நடிச்சார் விஷ்ணு. அந்த வகையில் ரச்சிதாவுடன் ஏற்கெனவே இவருக்கு அறிமுகம் உண்டு. அதேபோல ரச்சிதாவும் பிக் பாஸில் அவரது நெருங்கிய தோழியாக இருந்த ஷிவினும் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்ததும் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் விஷ்ணுவும் கலந்துகொண்டார். ரச்சிதா சமீபத்தில் புதிதாகக் கார் வாங்கிய போது கூட உடன் சென்று அவருக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார் விஷ்ணு.
பிக் பாஸைப் பொறுத்தவரைப் பழைய போட்டியாளர்கள் அடுத்து வரும் நிகழ்ச்சிகளுக்குத் தங்களுக்கு வேண்டியவர்களைச் சிபாரிசு செய்வதென்பது வழக்கமானதுதான். 'ராபர்ட் மாஸ்டரை நான்தான் சிபாரிசு செய்தேன்' என வனிதா விஜய்குமார் பேட்டி கொடுத்திருந்தது நினைவிருக்கலாம். இப்போது அந்தக் கணக்கு விவரம் புரிகிறதா? ஆக, ரச்சிதா, ஷிவின் இருவருடைய சிபாரிசு இதில் நிச்சயம் இருக்கு’’ என்கிறார்கள் அவர்கள்.
சில மாதங்களுக்கு முன் ரச்சிதாவுக்கும் அவரது கணவர் தினேஷுக்கும் இடையிலான பிரச்னை பெரிதான போது, ரச்சிதாவின் தோழியும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுமான ஜி.ஜி., தினேஷ் மீது போலீஸ் புகார் கொடுத்தாரில்லையா, அந்தப் புகார் மனுவில் விஷ்ணுவின் பெயரும் இருந்ததையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். அதாவது ’விஷ்ணுவையும் தினேஷ் மிரட்டினார்’ எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார் ஜி.ஜி.
எப்படியோ, தான் விரும்பியபடி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்லத் தயாராகிவிட்டார் விஷ்ணு. அங்குப் பழைய போட்டியாளர்களைப் போலக் காதல் வலையில் விழுகிற உத்தியை அப்ளை செய்வாரா அல்லது அங்கு வரும் சக பெண் போட்டியாளர்களுக்கு அமுல் பேபியாக, உற்ற நண்பனாகத் திகழ்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
from Latest news https://ift.tt/RcZewvV
0 Comments