மும்பையில் திருடிவிட்டு விமானத்தில் ராஞ்சிக்குச் சென்று காதலியுடன் ஆடம்பரமாக இருந்த நபர் கைதுசெய்யப்பட்டார். மும்பை, சாக்கி நாக்கா பகுதியில் வசிக்கும் மொகமத் ஷேக் என்பவர் குடும்பத்தோடு வெளியில் சென்றுவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தபோது திருட்டில் ஈடுபட்ட நபர், தலையில் தொப்பி வைத்துக்கொண்டு, முகக்கவசம் அணிந்துகொண்டு திருட்டு நடந்த கட்டடத்திலிருந்து வெளியில் சென்றார்.
இது குறித்து மும்பை போலீஸ் துணை கமிஷனர் தத்தா நலவாடே, ``குற்றவாளி முகக்கவசம் அணிந்திருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது குற்றவாளி ஓர் இடத்தில் முகக்கவசம், தொப்பியை அகற்றியது தெரியவந்தது. இதில் குற்றவாளி `டிக் டாக்’ மற்றும் சோஷியல் மீடியாவில் பிரபலமாக விளங்கிய அபிமன்யு குப்தா என்று தெரியவந்தது. அவன் ராஞ்சியில் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அங்கு சென்று அவனைக் கைதுசெய்து அழைத்து வந்தோம்.
சாக்கி நாக்கா வீட்டில் திருடிய 3.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவனிடம் விசாரணை நடத்தியதில் மும்பை வீடுகளில் இரவு நேரங்களில் திருடி, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான். இதற்கு முன்பு ஏழு முறை இதே போன்று திருடி கைதுசெய்யப்பட்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் மீண்டும் திருட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தான். திருடியவுடன் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு கோவா அல்லது ராஞ்சிக்குச் சென்று சூதாட்டத்தில் ஈடுபடுவது, விலையுயர்ந்த ஆடைகள் வாங்குவது, பைக் வாங்குவது, சொகுசு ரெஸ்டாரன்ட்டுகளுக்குச் செல்வது போன்ற வழிகளில் பணத்தைச் செலவு செய்திருக்கிறான்.
எப்போதும் இவன் முகக்கவசம், தொப்பி அணிந்து திருட்டில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு முன்பு நடந்த திருட்டிலும் இதே போன்ற நடைமுறையைக் கடைப்பிடித்திருந்தான். திருடிவிட்டு ராஞ்சிக்கு விமானத்தில் சென்று காதலியுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையும் வழக்கமாகக்கொண்டிருந்தான். திருடுவதற்கு முன்பு குறிப்பிட்ட வீட்டில் அவன் ஒத்திகையில் ஈடுபடுவது வழக்கம். குப்தா சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமானவன்.அவனை சோஷியல் மீடியாவில் 10 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அதோடு `டிக் டாக்’கிலும் பிரபலமாக விளங்கினான்'' என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news https://ift.tt/twG1spC
0 Comments