சேலம்:`சாக்கடை நிரம்பி வழியுது, நடக்கவே முடில'; சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் மக்கள் அவதி!

சேலம் மாவட்டம், அழகாபுரம் காட்டூர் மெயின் ரோடு, சிவாய நகரில் கழிவுநீர் செல்ல ஏதுவாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணி முழுமை பெறாமல் இருக்கிறது. இதனால் கடந்த 20 நாள்களாக கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கும் நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தப் பகுதியில் பொதுவாகவே மழைக்காலங்களில், கழிவுநீர் மழைநீரோடு சேர்ந்து சாலைகளிலும், தெருக்களிலும் தேங்கி நிற்கும் எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டுக்குள் புகும் அவலமும் நிகழ்கிறது எனச் சொல்லப்படுகிறது. இதை நிவர்த்தி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். இந்த நிலையில் மழைநீருடன் கூடிய கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்பதைத் தடுப்பதற்காக குரங்குச் சாவடிக்குச் செல்லும் முக்கிய சாலையான சிவாய நகரில், பாலம் கட்டும் பணி ஒரு மாதத்துக்கு முன் தொடங்கப்பட்டது. 

கழிவு நீர்

``இங்கு ஒரு பாலம் கட்டுறேன்னு சொல்லி, இருக்கிற கால்வாயை ஒடச்சி வச்சிருக்காங்க. இருக்கிற சாக்கடையெல்லாம் நிரம்பி வழியுது. ரோட்டுல நடக்கறதுக்கே முடியாம, அவ்வளவு கஷ்டமா இருக்கு‌. இது சம்பந்தமா எல்லா இடத்துலயும் புகார் கொடுத்தோம். கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி-ன்னு எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. அவங்க இன்னும் எதுவுமே செய்யல" எனப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதற்கான அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிடும்போது இன்னும் நான்கு நாள்களில் சரிசெய்திடுவோம், ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மழைக்காலம் எனப் பல காரணங்களைக் கூறிக்கொண்டு சரியான நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கழிவு நீர்

இங்கு தேங்கியிருக்கும் கழிவுநீரில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள். முதியோர்கள் எனப் பலருக்கும் நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சாக்கடை தேங்கி நிற்கும் தெருவில்தான் அங்குள்ள குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் எனப் பலரும் சாலையைக் கடந்து செல்கின்றனர். அரசாங்கம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முன்னாள் காங்கிரஸ் எம்.பி கே.வி.தங்கபாலுவின் வீட்டுக்கு முன் இவை நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Latest news https://ift.tt/Hf1KBkQ

Post a Comment

0 Comments