Kodanad `ரூ.25 கோடி பேரம்; ஆவணங்கள் எடப்பாடி குழுவிடம் தான் இருக்கு!’ - மீண்டும் பற்ற வைத்த தனபால்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கனகராஜின் அண்ணன் தனபால் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். முன்னதாக அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம், ``முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு கொடநாட்டில் நடந்த நிகழ்வுகள் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த விஷயத்தில் என்னுடைய தம்பி கனகராஜ் விபத்துக்குளானதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் உண்மை இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரம் உள்ளது” என்றார்,

மேலும் தனது தம்பி தன்னிடம் கூறியதை சி.பி.சி.ஐ.டி காவல்துறையிடம் சொல்ல தயாராக இருப்பதாவும், கொடநாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட ஐந்து பைகளில் மூன்று பைகள் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷிடமும், இரண்டு பைகள் இளங்கோவனிடமும் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, இளங்கோவன் ஆகியோர் எனது தம்பியை மூளை சலவை செய்து 25 கோடி ரூபாய் கொடுப்பதாக பேரம் பேசியுள்ளனர் எனவும் கூறினார்.

கனகராஜ், தனபால்

மேலும் தொடர்ந்தவர், தான் கைது செய்யப்பட்ட போது என்னை விசாரித்த அதிகாரி முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் எழுதிக் கொடுத்த பேப்பரில் தான் கையெழுத்து போட்டேன், தான் எதையும் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எடப்பாடி வெங்கடேஷ், ஆத்தூர் இளங்கோவன் ஆகியோரிடமும் விசாரணை செய்ய வேண்டும் என கூறிய அவர், கொடநாடு கொலை, கொள்ளை பொறுத்தவரை எதேச்சையாக நடந்தது இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்டது, என்றும் அரசு அதிகாரிகளின் துணை இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், ``நான் இப்போது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு தயாராக உள்ளேன். எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் வாக்குமூலம் அளிக்க தயார். எனது தம்பி கனகராஜுக்கு பேரம் பேசப்பட்ட ரூ. 25 கோடி பணத்தை பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட பிரச்னையில் அயோத்தியாபட்டினம் அருகே தென்னந்தோப்பில் மது அருந்திவிட்டு அவர் வந்தபோது கொலை செய்யப்பட்டார்” என வெளிப்படையாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

``கொடநாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட ஆவணங்களை வைத்து தான் தற்போது எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆவணங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவிடம் தான் உள்ளது. இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர்களையும் விசாரணை உட்படுத்தப்பட வேண்டும்” என்று மீண்டும் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Latest news https://ift.tt/NYxrisJ

Post a Comment

0 Comments