மியான்மர்: அகதிகள் முகாம் மீது பீரங்கி தாக்குதல்; குழந்தைகள் பெண்கள் உட்பட 29 பேர் பலியான சோகம்!

2021 ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அப்போதிலிருந்து அங்கிருந்த மக்களின் சிறு சிறு குழுக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்துக் குரலெழுப்பி வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஈவிரமின்றி ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள். எப்போதும் பதற்றமான நாடாகக் காணப்படும் மியான்மரின் ராணுவ ஆட்சியைச் சர்வதேச நாடுகள் அவ்வப்போது கண்டித்தும் வருகின்றன. ஆனாலும், ராணுவம் தொடர்ந்து மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மியான்மாரில் சீன எல்லைக்கு அருகில் உள்ள அகதிகள் முகாம் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

மியான்மர்

இந்தத் தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் பலியாகியிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ஷேடோ நேஷனல் யூனிட்டி அரசும் (என்யுஜி) யாங்கூனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகமும், இந்தத் தாக்குதலுக்கு ராணுவம்தான் காரணம் எனக் குற்றம்சாட்டியிருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டை மறுத்த மியான்மர் ராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன்,"நாங்கள் விசாரித்து வருகிறோம். எல்லையில் அமைதி நிலவுவதை நாங்கள் எப்பொழுதும் கவனித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/tl0hMvw

Post a Comment

0 Comments