பாலஸ்தீனம் - இஸ்ரேலுக்கு மத்தியில் யுத்தம் நடந்து வருகிறது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் குழுப் போராளிகளுக்கும் இடையே உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். இந்த நிலையில், ஹமாஸ் குழு ஒரு பெண்ணைக் கொன்று, அவரின் உடலை நிர்வாண நிலையில் எடுத்துச் செல்வதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், ஹமாஸ் குழுவினரால் கொல்லப்பட்டு, நிர்வாண நிலையில் எடுத்துச் செல்லப்பட்ட உடல், தன்னுடைய மகளுடையது என ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வீடியோவில் அந்தப் பெண், ``பச்சை குத்தும் கலைஞரான என் மகள் பெயர் ஷானி லூக். ஒரு இசை நிகழ்ச்சிக்காக இஸ்ரேலுக்குச் சென்றிருந்தாள். என் மகளின் உடலை மட்டுமாவது திரும்ப ஒப்படைத்துவிடுங்கள்" எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், இன்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் தன் மகள் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அந்த வீடியோவில்,"பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஒரு குடும்ப நண்பர் எனது மகள் ஹமாஸ் மருத்துவமனையில் உயிருடன் இருப்பதாக என்னிடம் கூறினார். ஆனால் தலையில் பலத்த காயம் இருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாகும். ஜெர்மன் அரசு விரைவாகச் செயல்பட்டு எங்கள் மகளை மீட்க வேண்டும்" எனக் கேட்டிருக்கிறார். இந்த வீடியோவும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
from Latest news https://ift.tt/AabwKhN
0 Comments