AFGvBAN: ஒரு நாள் போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸ்; வங்க தேச அணிக்கு முதல் வெற்றி!

2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று தர்மசாலா மைதானத்தில் வங்கதேச அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இதில் ஆப்கானிஸ்தான் அணியை ஆல் அவுட் ஆக்கியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது வங்கதேச அணி.

முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷகீப் அல் ஹசன் பௌலிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தான அணியின் ஓப்பனர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாட்ரன் இருவரும் களமிறங்கினர். இந்த ஓப்பனிங் ஜோடி இணைந்து ஆப்கன் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. முதல் எட்டு ஓவர்களிலேயே ரன்ரேட் 6 ஆக இருந்தது. ஆனால், அடுத்த ஓவரிலிருந்து ஆட்டம் அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. ஒன்பதாவது ஓவரை வீசிய ஷகீப் அல் ஹசன், ஜாட்ரன் விக்கெட்டைக் கழட்டிவிட்டார். ஐந்தாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் ஷகிப்பிற்கு இந்த விக்கெட் மிக முக்கியமான மைல்கள். அடுத்து வந்த ரஹ்மத் ஷா, குர்பாஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கினாலும் பெரிதாக ரன் எடுக்க முடியவில்லை. 18 ரன்கள் எடுத்த இவர், அதே ஷகிப் வீசிய 16 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது, ஆப்கன் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், இதற்குப் பிறகு வந்த 9 பேட்ஸ்மேன்களால் 80 ரன்களைக் கூட எடுக்க முடியவில்லை.

வங்க தேச அணி vs ஆப்கானிஸ்தான்

அடுத்த 25 ஓவர்கள் வரை, ரன்கள் வராவிட்டாலும் பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தனர். அணியின் கேப்டனான ஷாஹிடி, 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டார். 26 ஓவரை வீசிய முஸ்தபிகர் ரஹ்மான், சிறப்பாக விளையாடி வந்த குர்பாஸின் விக்கெட்டை எடுத்தார். இவர் மட்டும் 47 ரன்கள் எடுத்திருந்தார். இவர் மட்டும் தம்கட்டி விளையாடாமல் இருந்திருந்தால், ஆப்கன் அணி 100 ரன்களில் ஆல்- அவுட் ஆகியிருக்கும். இதற்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் உப்பும் இல்லை, உரைப்பும் இல்லை. வெறும் விக்கெட் இழப்புகள் தான். 26 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தது. பௌலிங்கைப் பொறுத்தவரையில் ஷகிப் அல் ஹசனும், மெஹடி ஹசனும் மிரட்டியிருந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஓமர்ஜாயைத் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கங்களில் ரன் எடுத்துவிட்டு ஓட்டம் பிடித்தனர். ஓமர்ஜாய் மட்டும் 4 பௌண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கானும், ஒரே பௌண்டரி எடுத்து ஆட்டமிழந்தது தான் சோகம். 35வது ஓவரில் அணியின் ஸ்கோர் 150 ரன்களாக இருந்த போது, 9 ரன்களுடன் ரஷித் கான் அவுட்டானர். அடுத்த இரு ஓவர்களில் ஆப்கனின் கூடாரமே காலியானது. 37.2 ஓவர்கள் முடிவில் 156 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி ஆல் அவுட்டானது. இதில் ஷகிப் அல் ஹசன், மெஹிடி ஹசன் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.

வங்க தேச அணி

ஸ்கோர் கார்டைப் பார்க்கும் போதே, வங்கதேச அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த 156 ரன்களையும் 35வது ஓவர் வரை இழுக்கடித்து வெற்றி பெற்றது வங்கதேச அணி. டான்சித் ஹசன் மற்றும் லிட்டன்குமார் தாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஓப்பனிங் ஜோடி நான்கு ஓவர்கள் வரைதான் நீடித்தது. 5வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்டார், லிட்டன் தாஸ். மறுமுனையில் நின்று கொண்டிருந்த டான்சித் ரன் ஓட முயற்சித்து ரன்-அவுட் ஆனார். இவர் அடித்த பந்தை ஃபீல்டர் எடுத்து, நேராக ஸ்டம்பிற்கு அடிக்க டைரக்ட் ஹிட்டாக மாறியது. அடுத்த விக்கெட்டிற்கு மெஹிடி ஹசன் களமிறங்கினார். இதற்கிடையில் 7வது ஓவரில், லிட்டன் குமார் தாஸும் அவுட்டாகிப் போனார். இவர் எதிர்கொண்ட பந்து, பேட்டில் பட்டு ஸ்டம்பைத் தெறிக்கவிட்டது. இந்த விக்கெட்டிற்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் அணியும் பௌலிங்கில் வெளுத்து கட்டும் என்றே தோன்றியது. ஆனால், அடுத்து களமிறங்கிய ஷான்டோவுடன் மெஹிடி ஹசன் ஜோடி சேர, ஆட்டம் நிதானமாக டேக்-ஆஃப் ஆனது.

இவர்கள் இருவரும் ஆடியது டெஸ்ட் இன்னிங்ஸ் தான். சிங்கிளும் இரண்டுமாக ரன்கள் வரத் தொடங்கியது. 20 ஓவர்களில் முடிக்க வேண்டிய ஆட்டத்தை, 35 ஓவர்களுக்கு இழுத்து விட்டது, இந்த ஜோடி.

15 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 74 ரன்களாக இருந்தது. ஆனால், ஆட்டத்தில் விறுவிறுப்பும் இல்லை. அதிரடியும் இல்லை. இது எந்த அளவிற்கு இருந்தது என்றால், கமெண்டேட்டர்ஸ்களே மேட்சைப் பற்றிப் பேசாமல் தர்மசாலா மைதானத்தைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருந்தனர். அதற்கேற்ப, கேமராமேன்களும் தர்மசாலா மைதானத்தைக் கழுகுப் பார்வையில் அடிக்கடி காண்பித்துக் கொண்டிருந்தனர். ஒருவகையில், இந்த ஆட்டத்தை Sleeping pill என்றும் சொல்லலாம்.

வங்க தேச அணி | மெஹிடி ஹசன்

தூங்கி வழிந்து கொண்டிருந்த ரசிகர்களைத் தட்டி எழுப்பும் விதமாக ஒரு சத்தம். மெஹிடி ஹசன் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் எதிர்கொண்ட பந்து காலில் பட்டதாக எல்.பி.டபிள்யு விக்கெட் கொடுக்கப்பட்டது. விக்கெட் எடுத்த ஆரவாரத்தில் ஆப்கன் அணியினர் கத்திய சத்தம் தான் அது. ஆனால், ரிவ்யூவில் நாட் அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு, 29வது ஓவரில் 57 ரன்கள் எடுத்த மெஹிடி ஹசன் அவுட் ஆனார். இதையடுத்து ஷகிப் களத்திற்கு வர, ஷான்டோ அரைசதம் அடித்தார். ஷகிப் இரண்டு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில், 34வது ஓவரில் அவுட்டாகிவிட்டு கிளம்பினார்.

அடுத்த ஓவரிலேயே வங்கதேச அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சொதப்பிய ரஷித் கான் பௌலிங்கிலாவது பட்டையைக் கிளப்பினாரா என்றால், அதுவும் இல்லை. 9 ஓவர்கள் வீசியதில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை. 35வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து அதிரடியுடன் நிறைவு செய்தார், ஷான்டோ. இவர் 83 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி.

பேசாமல் தர்மசாலா மைதானத்தைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருந்தனர். அதற்கேற்ப, கேமராமேன்களும் தர்மசாலா மைதானத்தை கழுகுப் பார்வையில் அடிக்கடி காண்பித்துக் கொண்டிருந்தனர். ஒருவகையில், இந்த ஆட்டத்தை Sleeping pill என்றும் சொல்லலாம். தூங்கி வழிந்து கொண்டிருந்த ரசிகர்களை தட்டி எழுப்பும் விதமாக ஒரு சத்தம். மெஹிடி ஹசன் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் எதிர்கொண்ட பந்து காலில் பட்டதாக எல்.பி.டபிள்யு விக்கெட் கொடுக்கப்பட்டது. விக்கெட் எடுத்த ஆரவாரத்தில் ஆப்கன் அணியினர் கத்திய சத்தம் தான் அது. ஆனால், ரிவ்யூவில் நாட் அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

வங்க தேச அணி

இதற்குப் பிறகு, 29வது ஓவரில் 57 ரன்கள் எடுத்த மெஹிடி ஹசன் அவுட் ஆனார். இதையடுத்து ஷகிப் களத்திற்கு வர, ஷான்டோ அரைசதம் அடித்தார். ஷகிப் இரண்டு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில், 34வது ஓவரில் அவுட்டாகிவிட்டு கிளம்பினார். அடுத்த ஓவரிலேயே வங்கதேச அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சொதப்பிய ரஷித் கான் பௌலிங்கிலாவது பட்டையைக் கிளப்பினாரா என்றால், அதுவும் இல்லை. 9 ஓவர்கள் வீசியதில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்தவில்லை. 35வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்து அதிரடியுடன் நிறைவு செய்தார், ஷான்டோ. இவர் 83 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி.


from Latest news https://ift.tt/ZRkgQsD

Post a Comment

0 Comments