விலையுயர்ந்த பைக்கில் சாகசம் செய்வது, அந்த வீடியோக்களை யூடியூபில் பதிவிடுவது, அவரது ரசிகர்களைச் சந்திப்பது என டி.டி.எஃப்.வாசன் சமீபகாலமாகப் பிரபலமடைந்தார். அதே நேரம், வேகமாகச் செல்வது, விபத்து ஏற்படுத்தியது, சர்ச்சையான பேச்சு எனப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தார். கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரத்துக்கு அருகே ரூ.20 லட்சம் மதிப்பிலான பைக்கில் செல்லும்போது, சாகசம் செய்ய முயன்று, விபத்து ஏற்பட்டுக் காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டி.டி.எஃப்.வாசன் மீது, பாலுசெட்டிசத்திரம் காவல்துறை ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்தது.
காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் இரண்டு முறை ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு டி.டி.எஃப்.வாசன் தரப்பு மனு அளித்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி கார்த்திகேயன் விசாரணையின் போது, "விளம்பரத்துக்காக இது போன்ற செயலில் ஈடுபடும் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட வேண்டும். அவரது பைக்கை எரித்துவிட வேண்டும். வாசனுக்குச் சிறையில் மருத்துவச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் முன்வைத்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" எனக் கூறினார் காட்டமாக.
வாகனத்தை எரிக்க வேண்டும் என நீதிபதி கூறியது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், போக்குவரத்துத் துறை, காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து, டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு, அதாவது, 06.10.2023 முதல் 05.10.2033 வரை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்களும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/y2PmNCY
0 Comments