திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நசீரா தாவூத். திண்டுக்கல்லில் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பெங்களூருவில் மருத்துவம் பயின்று மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் மருத்துவராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு காதலர்களின் அடையாளமாக கருதப்படும் தாஜ்மஹாலில் வைத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் நசிரா தன்னுடைய சொந்த மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் திருமணம் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் மருத்துவர் நசிராவுக்கும், பில் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
கொடைக்கானலில் எளிமையான முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் தம்பதியின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதில் ருசிகரமாக நசீரா மற்றும் பில் ஆகிய இருவரும் ஜாதி , மதம், இனம் கடந்து காதலித்த நிலையில், அவர்களின் திருமணம் காலையில் கிறிஸ்துவ முறைப்படியும், மதியம் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடைபெற்றது. மும்மதப்படி நடந்த இந்த திருமணம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
from Latest news https://ift.tt/UbietVK
0 Comments