சேலம்: கஞ்சாவுடன் பிடிபட்ட போலி எஸ்.ஐ; சிறையில் பழகிய ரெளடிகளுக்கு எடுத்துச் சென்றது அம்பலம்!

சேலத்தில் நேற்று முன்தினம் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸில் ரயில்வே போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ரயிலில் பயணித்த நபர் ஒருவர் போலீஸாரைக் கண்டவுடன் ரயிலிலிருந்து தப்பிக்க முயன்றிருக்கிறார். அந்த நபரைப் பிடித்த போலீஸார் அவர் வைத்திருந்த பேக்கிலிருந்து ஐந்து கிலோ கஞ்சா பொட்டலத்தைக் கைப்பற்றினர். இது குறித்து விசாரணை செய்தபோது, அவர் தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியைச் சேர்ந்த அப்துல் முகித் என்பது தெரியவந்தது. அவரிடம் நடந்த தொடர் விசாரணையில் போலி போலீஸ் எஸ்.ஐ ஐ.டி கார்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மூலம் அப்துல் முகித் தன்னை போலீஸ் எனக் கூறிக்கொண்டு பலரை மிரட்டிப் பணம் பறித்துவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் முகித்தை ஐந்து கிலோ கஞ்சாவுடன் சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸில் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். அங்கு அப்துல் முகித்தின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பின்னர் அவரிடம் இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் கஞ்சா கடத்தல் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கைதான அப்துல் முகித், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டிலுள்ள தனியார் கல்லூரியில் தன்னை போலீஸ் எஸ்.ஐ எனக் கூறிக்கொண்டு தெரிந்த நபருக்கு இன்ஜினீயரிங் சீட் தர வேண்டும் என மிரட்டியிருக்கிறார். அப்போது அந்தக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் போலிஸில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. பிறகு மறைமலைநகர் போலீஸார் அப்துல் முகித் போலி போலீஸ் என்பதைக் கண்டறிந்து, கைதுசெய்து செங்கல்பட்டுச் சிறையில் அடைத்திருக்கின்றனர். அங்கு சிறையில் இருந்தபோது பல ரெளடிகளுடன் அப்துல் முகித்துக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதில், சில ரௌடிகள் ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்திவந்து ஈரோட்டில் கொடுத்தால் 50,000 ரூபாய் தருவதாகக் கூறியுள்ளனர். அதன்படியே அந்த ரெளடிகளுக்காக ஒடிசாவுக்குச் சென்று, கஞ்சா வாங்கிக்கொண்டு ஈரோட்டுக்கு ரயிலில் சென்றபோது போலீஸில் சிக்கியது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/S6NA9kx

Post a Comment

0 Comments