இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த ஆறு நாள்களாக நடைபெற்றுவரும் இந்தப் போரில் இரு தரப்பிலிருந்தும் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா, இராக், இரான், சிரியா போன்ற சர்வதேச நாடுகளின் தனிப்பட்ட ஒருசார்பு ஆதரவால், இந்தப் போர் தற்போது சர்வதேசப் பிரச்னையாக மாறிவருகிறது.
குறிப்பாக, ரஷ்யா - உக்ரைன் போரின்போது, ``இது போருக்கான நேரமல்ல, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்'' என்று கூறிய இந்திய பிரதமர் மோடி, ``இந்தக் கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேல் பக்கம் நிற்கிறோம்'' என்று தற்போது தெரிவித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், ஹமாஸின் தாக்குதலைத் தீவிரவாதத் தாக்குதலாகவே பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ``இதைத் தீவிரவாதத் தாக்குதலாகவே பார்க்கிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
அதேசமயம், இஸ்ரேலுடன் அமைதியான முறையில், தங்களின் எல்லைகளுக்குள் இறையாண்மைகொண்ட சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்துகிறது. அந்த நிலைப்பாட்டில் நாங்கள் அப்படியே இருக்கிறோம். மேலும், தீவிரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பதற்கான உலகளாவிய பொறுப்பு இருக்கிறது" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/DmodrUM
0 Comments