தண்ணீர்த் தொட்டிக்குள் எலும்புத்துண்டுகள்; அதிர்ந்துபோன கோவை மக்கள் - என்ன நடந்தது?

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையம் பகுதியில் வெள்ளமடை ஊராட்சிக்குச் சொந்தமான மேல்நிலை குடிநீர்த் தொட்டி இருக்கிறது. சுமார் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவுகொண்ட அந்தத் தொட்டியிலுள்ள தண்ணீர், காளிபாளையம், சாமநாய்க்கன்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

தண்ணீர்த் தொட்டி

அந்தக் குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் சென்றபோது, அதில் எலும்புத்துண்டுகள் கிடப்பதைக் கண்டு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

தகவலறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வுசெய்தனர். இது அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக தொட்டியைச் சுத்தப்படுத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எலும்புக் கூடு

இதையடுத்து தண்ணீர் தொட்டி பிளீச்சிங் பவுடர் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, “தொட்டியில் இருந்து ஏதோ நாற்றம் வருகிறது என்ற தகவலின் பேரில் பணியாளர்கள் அதைச் சுத்தம் செய்யச் சென்றனர். அப்போதுதான் எலும்புத்துண்டுகளைப் பார்த்திருக்கின்றனர். விசாரணையில் அது மயிலின் எலும்புத்துண்டுகள் என்று தெரியவந்திருக்கிறது.

தண்ணீர்த் தொட்டி

மனிதர்கள் அல்லது வேறு விலங்கினமாக இருந்திருந்தால் உடனடியாகத் தெரிந்திருக்கும். பறவை என்பதால் சற்று தாமதமாகத் தெரிந்திருக்கிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/Cz15Ebn

Post a Comment

0 Comments