ஹமாஸ் தாக்குதலில் பலியான மகள்; Iphone & Apple Watch உதவியுடன் கண்டுபிடித்த அமெரிக்கர்!

இஸ்ரேலில் கடந்த வாரம், சூப்பர் நோவா இசை விழாவில் ஹமாஸ் குழுவால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய - அமெரிக்கப் பெண்ணின் தந்தை, ஆப்பிள் வாட்ச் மற்றும் செல்போனின் கண்காணிப்பு அம்சத்தைப் பயன்படுத்தி, தன்னுடைய மகளின் சடலத்தைக் கண்டறிந்திருக்கிறார்.

கொல்லப்பட்ட பெண்ணின் தந்தையின் பெயர் இயல் வால்ட்மேன். தொழிலதிபரான இவர், கம்ப்யூட்டர் நெட்வொர்க் தயாரிப்புகளின் பன்னாட்டு விநியோக நிறுவனமான `மெல்லனாக்'ஸின் நிறுவனருமாவார். இயலின் 24 வயது மகள் டேனியேலும், தெற்கு இஸ்ரேலில் கடந்த வாரம் நடைபெற்ற இசைத் திருவிழாவில் தன்னுடைய காதலனுடன் கலந்துகொண்டிருக்கிறார்.

தாக்குதலில் கொல்லப்பட்ட டேனியல்

அந்த நேரத்தில்தான், ஹமாஸ் படையினர் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தினர். இதில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், சிலரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இது குறித்துத் தகவல் தனக்குக் கிடைத்ததும், தன்னுடைய மகளையும் ஹமாஸ் படையினர் பிணைக் கைதியாக அழைத்துச் சென்றிருக்கலாம் என நினைத்திருந்திருக்கிறார் இயல். ஆனால், தாக்குதல் நடந்து நான்கு நாள்களுக்குப் பிறகே, தன்னுடைய மகள், அவருடைய காதலன் இருவரும் இறந்துவிட்டனர் என்பதை அவர் தெரிந்துகொண்டார்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய இயல் வால்ட்மேன், ``ஹமாஸ் தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்தவுடன், நான் சில மணி நேரத்திலேயே இஸ்ரேலுக்கு விரைந்தேன். அவளது ஆப்பிள் வாட்ச்சிலிருந்து எனக்கு அலர்ட் வந்த நிலையில், அதைவைத்து இசை நிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்று, என்னுடைய மகளின் கார் மற்றும் சில உடைமைகளைக் கண்டுபிடித்தோம். அவளது ஐபோனிலிருந்து எமர்ஜென்சி காலும் வந்திருந்தது. அங்கிருந்த துப்பாக்கிக்குண்டுகளைப் பார்த்தபோது, அவரது காரைச் சுற்றிவளைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள், குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து பேர் இரண்டு திசைகளிலிருந்து என்னுடைய மகளைக் கொடூரமாகக் கொன்றிருக்கக்கூடும் என்பது புரிந்தது. ஹமாஸ் தாக்குதல் நடத்தத் தொடங்கியவுடன், என்னுடைய மகள், அவரின் காதலர் இன்னும் சிலர் காரில் ஏறித் தப்ப முயன்றிருக்கின்றனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

அதையடுத்து, ஹமாஸ் படையினர் காரை வழிமறித்து அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். என்னுடைய மகளிடம் நான் கடைசியாகப் பேசியபோது, தன்னுடைய காதலனை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இப்போது அவளை இழந்து நிற்கிறேன். என்னுடைய மகள் அனைவரிடமும் அன்பாகப் பழகுவாள், அவளுக்கு நேர்ந்த இந்தக் கொடூரத்தை என் மனம் ஏற்க மறுக்கிறது, என்னுடைய மகள் யாருக்கு என்ன தவறு செய்தாள்... அவளை ஹமாஸ் பயங்கரவாதிகள் கொன்றதை ஏற்கவே முடியாது" என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/yTDOFSK

Post a Comment

0 Comments