தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘சலார்’.
இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். தவிர, 'The Eye’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனியார் கடை திறப்பு விழாவிற்காக கோவை சென்றிருந்த ஸ்ருதி ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்ருதி ஹாசன், “ இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கோயம்புத்தூர் வருவது எனக்கு பிடிக்கும். வழக்கமாக நான் கறுப்பு மற்றும் மார்டன் உடைகளைத்தான் அணிவேன்.
ஆனால் நான் விரும்பி பாரம்பரிய புடவை மாதிரியான உடைகளை அணிந்தால் அது எனக்கு ஒரு பாசிடிவ் உணர்வைக் கொடுக்கும். எனக்குப் பெரும்பாலும் என் அப்பத்தான் புடவைகளைப் பரிசாக அளிப்பார். ஆனால் அவர் பெரும்பாலும் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் புடவைகளைதான் எடுப்பார். நான் கருப்பு மற்றும் கருநீலப் புடவைகளை எடுத்து தரச் சொல்லி கேட்பேன்” என்றார். பிறகு பேசிய அவர் , “ நான் தமிழ் பெண்தான். அதனால் தமிழ் படங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.
கூடிய விரைவில் எனது ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது. படங்களைப் பொறுத்தவரை பட்ஜெட் குறித்து எல்லாம் பார்க்காமல் மக்களுக்கு அழகான கதைகளைக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். பின்னர் உங்கள் தந்தை கமல் ஹாசனை வைத்து படம் இயக்குவீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், 'அய்யய்யோ அப்பாவா... இல்ல’ அப்போவோட யாராலும் போட்டிபோட முடியாது” என கூறியிருக்கிறார்.
அரசியல் வருகை குறித்து கேள்விக்கு, “ தற்போது அரசியலில் பெரிய அளவில் விருப்பம் இல்லை. சினிமா மற்றும் திரைப்படங்களில்தான் என் ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
from Latest news https://ift.tt/rk0gd2q
0 Comments