USA: `மேயர் பதவியை ராஜினாமா செய்யவில்லையென்றால்..!’ - இந்தியருக்குத் தொடர் கொலை மிரட்டல் கடிதம்

அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாகாணத்தின் ஹோபோக்கன் நகர மேயராக சீக்கியரான ரவீந்தர் பல்லா 2017-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்குத் தேர்வுபெற்றது அதுவே முதன்முறை. அவருக்கு முன்பு மேயர் பதவி வகித்துவந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர். பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்தர் பல்லா, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் எம்.எஸ்சி., பொது நிர்வாகப் பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் ஜூரிஸ் முனைவர் பட்டமும் பெற்றவர். 2021-ல் மீண்டும் போட்டியிட்டு, வெற்றிபெற்று மேயராகவே தொடர்கிறார்.

மேயர் ரவீந்தர் பல்லா

அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் முன்னரே அவரது காரில் யாரோ அவரை, `பயங்கரவாதி’ எனச் சித்திரிக்கும் வாசகங்களை எழுதி, பரபரப்பை ஏற்படுத்தினர். அவருக்கும், அவரின் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல்விடும் கடிதங்களும், மின்னஞ்சல்களும் தொடர்ந்து வருவதாகத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, "மின்னஞ்சலில் எனக்கு வந்த கடிதங்கள், முதலில் என்னை ராஜினாமா செய்யும்படி குறிப்பிட்டிருந்தன.

நான் சீக்கிய மதத்தைப் பின்பற்றுவதால் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் தொடங்கியிருக்கிறது. எனக்கு வந்த மூன்றாவது மிரட்டலில் 'உன்னைக் கொல்லும் நேரம் வந்துவிட்டது. இது உனக்குக் கடைசி எச்சரிக்கை. உடனடியாக ராஜினாமா செய்யாவிட்டால், நாங்கள் உன்னை, உன் மனைவியை, உன் குழந்தைகளைக் கொல்வோம்' எனக் குறிப்பிட்டிருந்தது. எனது பெரிய கவலை என் குழந்தைகள்தான்.

மேயர் ரவீந்தர் பல்லா

நான் மேயராகக் கையெழுத்திட்டது, என் குழந்தைகளைப் பலிகொடுப்பதற்கல்ல. ஒரு சீக்கிய அமெரிக்கன். பெருமைமிக்க அமெரிக்கனாக இங்கிருக்கும் மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், என் குழந்தைகள், மனைவி மீதான மிரட்டலாளர்களின் வெறுப்பு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/q376Bxg

Post a Comment

0 Comments