சேலம்: போலி டிக்கெட் வைத்து வசூல்... டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கிய நடத்துனர்!

சேலத்திலிருந்து சிதம்பரத்துக்கு அரசு ஏசி பேருந்து ஒன்று நேற்று அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்து டவுன் பஸ்ஸைப்போல் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நின்று நின்று சென்றது. பொதுவாக ஏசி பேருந்துகள், பாயின்ட் டு பாயின்ட் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள் ஆகியவை குறிப்பிட்ட ஊர்களில் மட்டுமே நின்று செல்லும்.

ஆனால் இந்த ஏசி பேருந்து கிராமம் கிராமமாக நின்று செல்வதை அடுத்து, பயணிகள் டிரைவரிடம், `ஏன் டவுன் பஸ்போல் நின்று நின்று செல்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரைவர், `அப்படித்தான் செல்வேன். எங்க வேண்டுமானாலும் புகார் கொடுத்துக்கொள்ளுங்கள்’ என பதிலளித்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.

டிக்கெட்

இதையடுத்து விருத்தாசலத்தை அடுத்த வடலூர் வந்தபோது அங்கு போக்குவரத்து கழகத்தின் டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் நின்றிருந்தனர். அவர்கள் பேருந்தை நிறுத்தி ஏறினர். அப்போது கண்டக்டரிடம் இருந்த டிக்கெட்டுகளைச் சோதனை செய்தனர். அதில் சீரியல் எண்ணைவைத்துச் சோதித்தபோது, அவை போலி டிக்கெட்டுகள் என தெரியவந்தது.

இதையடுத்து சிதம்பரத்திலுள்ள பெரியார் பஸ் டிப்போவிலுள்ள அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டு அந்தப் பேருந்தை டிக்கெட் பரிசோதகர்கள் கைப்பற்றினர். பேருந்தில் இருந்த பயணிகளை அவரவர் நிறுத்தங்களில் இறக்கி விட்டுவிட்டு பின்னர் பேருந்தை காலியாகவே எடுத்துக்கொண்டு சென்றனர். அந்த போலி டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் அங்கிருந்த ஒரு பயணியிடமும் பேருந்தை ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றியது, போலி டிக்கெட் விற்பனை செய்தது குறித்து சாட்சியாக எழுதி வாங்கிக்கொண்டனர்.

அவரையே சாட்சி சொல்ல அழைத்தனர். ஆனால் அவரோ தனக்கு வேறு வேலை இருப்பதால் தன்னால் தற்போது வர இயலாது என தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/TBqeQ5C

Post a Comment

0 Comments