தருமபுரி, பாரதியார்புரத்தைச் சேர்நத்வர் ரமேஷ்பாபு (57). இவர் தன்னை நீதிபதி எனக் கூறிக்கொண்டு, பழநி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய முயன்றார். அப்போது சந்தேகமடைந்த கோயில் பணியாளர்கள் விசாரித்ததில், அவர் நீதிபதி எனக் கூறி ஏமாற்ற முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பழநி அடிவாரம் போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ரமேஷ்பாபு கைதுசெய்யப்பட்டார்.
இதுகு றித்து நம்மிடம் பேசிய பழநி அடிவாரம் போலீஸார், ``ரமேஷ்பாபு ஆன்மிகப் பயணங்களுக்கான டூரிஸ் கைடு வேலை செய்து வந்திருக்கிறார். டிகிரி மட்டுமே படித்துள்ள ரமேஷ்பாபு மிடுக்காக உடையணிவதை வழக்காக கொண்டிருக்கிறார். இதனால் எந்த கோயில்களுக்கு சென்றாலும் தன்னை நீதிபதி என அறிமுகப்படுத்திக் கொண்டு, சிறப்பு தரிசனத்தை செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் பழநி கோயிலுக்கு வாடகை காரில் 4 பேரை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். அப்போது செம்பட்டி அருகே அவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியிருக்கிறது. போலீஸார் விசாரித்தபோது தன்னை நீதிபதி எனக் கூறியுள்ளார். இதனால் போலீஸார் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் சொன்னதும், வேறு வாடகை கார் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர்கள் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள பாதாளசெம்பு முருகன் கோயிலுக்கும், கணக்கன்பட்டி சித்தர் கோயிலுக்கும் சென்று சிறப்பு தரிசனம் செய்துள்ளனர்.
இதையடுத்துதான் பழநி வந்துள்ளனர். அப்போது பழநி தண்டாயுதபாணி தங்கும் விடுதியில் அறை வேண்டும் எனக் கேட்டுள்ளார். மேலும் தான் தர்மபுரி மாவட்ட நீதிபதியாக இருப்பதாகவும், தற்போது சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் இருப்பதாவும் பழநி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிடும் தொனியில் கூறியிருக்கிறார். இதில் சந்தேகமடைந்த கோயில் பணியாளர்கள் அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசி சிக்கியிருக்கிறார். இதைடுத்து பழநி அடிவாரம் போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரமேஷ்பாபு கைது செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.
from Vikatan Latest news https://ift.tt/SQ0rpCR
0 Comments