திருவண்ணாமலை அருகேயுள்ள கிளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ் - வயது 27. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியிடம் காதலிப்பதாகக்கூறி பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோர் மாதம் 21-ம் தேதி சிறுமி தனியாக இருந்தபோது, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டிருக்கிறார் சதீஷ். சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகே அவருக்கு நேர்ந்த கொடுமை பெற்றோருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, மங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். `போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸார், பாலியல் குற்றவாளி சதீஷை கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜூன் 6-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. சதீஷிக்கு `வாழ்நாள் சிறை’ தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார்.
மற்றொரு சம்பவம்:
திருவண்ணாமலை அருகேயுள்ள நாடழகானந்தல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் - வயது 54. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் சேகர்.
இது தொடர்பாக, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் `போக்சோ’ வழக்குப் பதிவு செய்து சேகரை கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணையும் திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில்தான் நடைபெற்று வந்தது. ஜூன் 7-ம் தேதியான நேற்றைய தினம், இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. பாலியல் குற்றவாளி சேகரை `சாகும் வரை சிறையிலடைக்க’ உத்தரவிட்ட நீதிபதி, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதையடுத்து, சேகரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/QvyXH60
0 Comments