Hockey Men's Junior WC 2025: ஓமன் அணியை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்; 17 - 0 என அபரா வெற்றி!

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நேற்று (நவம்பர் 28) முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 10 வரை இத்தொடரில் அனைத்து போட்டிகளும் மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும்.

24 அணிகள் விளையாடும் இத்தொடரில் இந்திய அணி குரூப் B-ல் இடம்பெற்றிருக்கிறது.

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை - இந்தியா vs ஓமன்
ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை - இந்தியா vs ஓமன்

நேற்று இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சிலி அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் 7 - 0 என எளிதாக சிலி அணியை இந்தியா வீழ்த்தியது.

அதைத்தொடர்ந்து இந்தியா இன்று (நவம்பர் 29) தனது இரண்டாவது ஆட்டத்தில் ஓமன் அணியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் தொடக்கம் முதல் கடைசி நிமிடம் வரை ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் 17 - 0 என ஓமனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக தில்ராஜ் சிங் 4 கோல்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக அர்ஷ்தீப் சிங் மற்றும் மன்மீத் சிங் தலா 3 கோல்களும், குர்ஜோத் சிங் மற்றும் அஜீத் யாதவ் தலா 2 கோல்களும், ஷர்தானந்த் திவாரி, அனுமோல் எக்கா, தௌனோஜாம் இங்கலெம்பா லுவாங் ஆகியோர் தலா 1 கோலும் அடித்தனர்.

அடுத்தடுத்த வெற்றியின் மூலம் குரூப் B-ல் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது. இதே குழுவில் ஸ்விட்சர்லாந்து அணியும் இரண்டு வெற்றிகள் பெற்றிருந்தாலும் கோல்கள் அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை - இந்தியா vs ஓமன்
ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை - இந்தியா vs ஓமன்

இந்த இரு அணிகளும் டிசம்பர் 2-ம் தேதி தங்களின் கடைசி லீக் போட்டியில் நேருக்கு நேர் மோதவிருக்கின்றன.

இன்று நடைபெற்ற மற்ற போட்டிகளில் ஸ்விட்சர்லாந்து அணி சிலி அணியை 3 - 2 எனவும், ஜெர்மனி கனடாவை 7 - 0 எனவும், ஆஸ்திரேலியா வங்காளதேசத்தை 5 - 3 எனவும், தென்னாப்பிரிக்கா அயர்லாந்தை 2 - 1 எனவும், பிரான்ஸ் கொரியாவை 11 - 1 எனவும், மலேசியா ஆஸ்திரியாவை 5 - 1 எனவும், நெதர்லாந்து இங்கிலாந்தை 5 - 3 எனவும் வீழ்த்தின.



from Vikatan Latest news https://ift.tt/YfHlOjU

Post a Comment

0 Comments