எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அண்ணாமலை; அடுத்து பன்னீர்செல்வம்..? - இணைப்பு முயற்சியில் பாஜக?!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிமனைகள் அமைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க தரப்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களமிறக்கி கூட்டணியிலிருக்கும் அனைத்துக் கட்சியினரும் அவருக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டங்கள், வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு என வேலைகளை முடுக்கியிருக்கின்றனர். ஆனால், மறுபக்கம் அ.தி.மு.க கூட்டணியிலோ பல குளறுபடிகள்.

அ.தி.மு.க!

அதில் முக்கியமாக அ.தி.மு.க-வுக்குள்ளேயே இ.பி.எஸ் தரப்பில் 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும், ஓ.பி.எஸ் தரப்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்து இருவருமே வேட்பாளர்களை அறிவித்திருப்பதால், யாரை ஆதரிப்பது என்கிற பலமான குழப்பம் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குள் நீடிக்கிறது. அதோடு, ‘பா.ஜ.க நின்றால் எங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்குவோம்... பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்போம்’ என்கிறார் ஓ.பி.எஸ் ஒருபக்கம். மறுபக்கமோ, ‘பா.ஜ.க நின்றாலும் நாங்கள் போட்டியிடுவது உறுதி. முன்வைத்த காலைப் பின்வைக்கமாட்டோம்’ என்கிறார் இ.பி.எஸ் ஆதரவாளர் ஜெயக்குமார்.

இந்த நிலையில், பா.ஜ.க யாரை ஆதரவளிக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நேற்று டெல்லி சென்ற பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தேசிய தலைமை நிர்வாகிகளை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை இன்று காலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

எடப்பாடியை சந்தித்த அண்ணாமலை

அதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அண்ணாமலை அ.தி.மு.க-வின் மற்றொரு தரப்பான ஒ.பன்னீர் செல்வத்தை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி சந்தித்த நிலையில், வேட்புமனு தாக்கல் தள்ளிவைப்பு.

இதனிடையே ஓபிஎஸ் இபிஎஸ் இருவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..



from Latest News https://ift.tt/xWKLk4M

Post a Comment

0 Comments