வடககம மககதடட வவகரம: பஙகளர எதரககடசகள கடடததகக சலவர ஸடலன?

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட தேசிய அளவிலும், மாநில அளவிலான முக்கிய எதிர்க்கட்சிகள் திட்டம் வகுத்துள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் ஏற்கெனவே ஜூன் 23-ஆம் தேதி பீகாரில் கூடி முதற்கட்ட ஆலோசனையை முடித்துள்ளன. அடுத்தகட்டமாக பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளன. ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் மீண்டும் மேக்கேதாட்டூ அணை விவகாரம் வெடித்திருப்பதால், கர்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தி.மு.க பங்கேற்பது தொடர்பாக விவாதங்கள் வெடித்துள்ளன.

மேகதாதுவில் அணை?

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ``மேக்கேதாட்டூ அணை திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பிரச்னையும் இல்லை, அதை அவர்களுக்கு புரிய வைப்போம்” என்று கூறியுள்ளார்.

மேக்கேதாட்டூவில் கர்நாடகம் அணை கட்டினால், காவிரியில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு பெருமளவு குறைந்துவிடும், நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தங்கள்படி காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டவே கூடாது என்பது தமிழ்நாட்டின் ஒருமித்த நிலைப்பாடாக உள்ளது. இதனால் கர்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்வாரா? இல்லையா? என்பது பேசுபொருளாகியுள்ளது.

இரு தினங்களுக்கு முன் கரூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர முடியாது என்று டி.கே.சிவக்குமார் சொல்கிறார், மேக்கேதாட்டூவில் அணை கட்டியே தீருவோம் என்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்காக பெங்களூருவுக்கு எப்படிச் செல்வார் என பார்க்கலாம். முதலமைச்சர் கர்நாடகாவுக்கு சென்றால், அவரை மீண்டும் தமிழ்நாட்டிற்குள் விட மாட்டோம். தமிழகத்திற்கு காவிரி நீர் தர முடியாது என்று அவர்கள் கூறிய பின்னரும், இனத்தை அடமானம் வைத்து விட்டு, அரசியல் லாபத்திற்காக முதலமைச்சர் சென்றால் பா.ஜ.க. அதனை பார்த்துக்கொண்டு இருக்காது. தமிழக முதலமைச்சர் கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். அண்ணாமலையின் இப்பேச்சு சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.

அண்ணாமலை

இந்நிலையில், மேக்கேதாட்டூவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்கும் என அமைச்சர் துரைமுருகன் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக அரசு அவ்வப்போது மேக்கேதாட்டூ பிரச்னையை எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது. இது அரசியல் நிர்பந்தத்தினாலோ என்னவோ தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. அண்மையில் கர்நாடக துணை முதல்வர் மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது மேக்கேதாட்டூ அணை திட்டத்திற்கு அனுமதி குறித்து பேசியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

இது வருந்தத்தக்கது, கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேக்கேதாட்டூ அணை திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. இத்திட்டம் குறித்து, எற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்கள். இத்திட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, வலுவான வாதங்களை முன் வைத்து கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிகளை முறியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்

அறிக்கை வெளியிட்ட கையோடு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தையும் சந்திக்க துரைமுருகன் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் டெல்லி சென்றிருக்கிறார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பெங்களூருவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல மாட்டார், நிர்வாகிகளை யாரையாவது அனுப்பி வைத்துவிடுவார் என்ற கருத்து நிலவுகிறது. அதேபோல ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த கூட்டத்தை ஜூலை 17, 18 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதும் மேக்கேதாட்டூ விவகாரத்தின் வெளிப்பாடுதான் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இதொடர்பாக தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணனிடம் பேசினோம். “எல்லா தலைவர்களின் வசதியைப் பொறுத்து தேதி மாற்றப்பட்டுள்ளது. கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தால் அவர்கள் சொல்லும் காரணம் உண்மையாக இருக்கலாம். ஆனால் 4 நாள்கள் தள்ளிவைத்தால் என்ன மாறிவிடப் போகிறது? ஆட்சியில் என்ன செய்து கிழித்தீர்கள் என பா.ஜ.க-விடம் மக்கள் கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் எதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பாட்னா கூட்டத்திற்கே பா.ஜ.க வைத்த விமர்சனங்கள் மிகவும் மலிவாக இருந்தன. இப்போதும் அதுபோலத்தான் சொல்கிறார்கள்.

சரவணன், திமுக செய்தித் தொடர்பாளர்

அந்த கூட்டத்திற்கு சென்று வந்தால் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது எனச் சொல்ல அண்ணாமலை யார்? தன்னை கர்நாடக சிங்கம், proud kannadiga என பெருமைப்பட்டவர்தானே அண்ணாமலை? இப்படி அருவருப்பாக, அநாகரீகமாக பேசுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். பா.ஜ.க தலைவர் என்ற பொறுப்பில் இருப்பதால், இந்த பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த பொறுப்பு இல்லாவிட்டால் அண்ணாமலையை யாரும் சீண்டக்கூட மாட்டார்கள். பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்திற்கு முதல்வர் கண்டிப்பாக செல்வார்.” என்றார்.



from Latest news https://ift.tt/Sh4IyTR

Post a Comment

0 Comments