புல்லட் பைக், காக்கி சீருடையில் வசூல் வேட்டை! - கோவையில் சிக்கிய போலி போலீஸ்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை வந்திருந்தார். அங்கிருந்து திருப்பூரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் சாலை மார்க்கமாகச் சென்று கலந்துகொண்டார். இதனிடையே, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் காவல் உதவி ஆய்வாளர் போல சீருடை அணிந்து ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

கோவையில் சிக்கிய போலி போலீஸ்

அப்போது அந்த வழியே வந்த ஒருவர் அவரை கண்டபோது, அவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக அருகில் இருந்த கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து கருமத்தம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு கருப்பு புல்லட், காக்கி சீருடை சகிதம் போலீஸ் கெட்டப்பில் இருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் விருதுநகர் மாவட்டம், திம்மன்பட்டியை சேர்ந்த மூக்கன் என்பவரது மகன் செல்வம் என்பது தெரியவந்தது.

கருமத்தம்பட்டி காவல் நிலையம்

கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். தான் காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்திருக்கிறது. 

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வீட்டில் இருந்து போலீஸ் உடையில் கிளம்பும் செல்வம், மில் வேலைக்குச் செல்லும் போது சாதாரண உடையை மாற்றிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். போலீஸ் கெட்டப்பில் அவ்வபோது வாகன தணிக்கையில் ஈடுபட்டு வசூல் வேட்டையும் நடத்தி வந்திருக்கிறார்.

கோவையில் சிக்கிய போலி போலீஸ்

அவர் மீது வழக்கு பதிந்து, கைதுசெய்துள்ளோம். அவர் பயன்படுத்திய  புல்லட் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றனர். முதல்வர் பயணித்த அதே வழித்தடத்தில், போலி போலீஸ் ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/B9Kip0h

Post a Comment

0 Comments